68. கோச்செங்கட் சோழ நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 68
இறைவன்: ஜம்புகேஸ்வரர்
இறைவி : அகிலாண்டநாயகி
தலமரம் : வெண்ணாவல்
தீர்த்தம் : காவிரி
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : திருஆனைக்கா
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மாசி - சதயம்
வரலாறு : திருவானைக்கா என்னும் தலத்தில் சிலந்தி ஒன்று சிவபெருமானுக்கு அவர் மீது சருகுகள் விழா வண்ணம் மேலே தன் வாய் நூலால் பந்தர் அமைத்து வழிபட்டு வந்தது. அங்கு வாழ்ந்த யானை ஒன்றும் தினமும் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்து வந்தது. சிலந்தி கட்டிய பந்தரை யானை அது அபசாரம் எனக் கருதி பந்தலை அழித்து வந்தது. இதனால் கோபமுற்ற சிலந்தி யானையின் தும்பிக்கையினுள் சென்று கடிக்க யான வலி தாளாமல் தும்பிக்கையைத் தரையில் மோத இரண்டும் இறந்தன. இறையருளால் சிலந்தி மறு பிறவியில் சோழ மன்னனாக கமலவதி என்னும் மங்கைக்குப் பிறந்தார். அவரது கண்கள் சிவந்து இருந்ததால் கோசெங்கணான் என்று பெயரிட்டனர். குழந்தை பிறந்ததும் கமலவதி மாண்டு போனாள். பிற்காலத்தில் முற்பிறப்பு நிகழ்வுகளால் அலைப்புண்ட மன்னன் சிவபெருமானுக்கு யானை புகாத வண்ணம் மாடக் கோயில்கள் எழுபது கட்டினான்.
முகவரி : அருள்மிகு. ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருஆனைக்கா – 620005 திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 0431-2230257

இருப்பிட வரைபடம்


மந்திரிகள் தமைஏவி வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில் அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந் தானங்கள் பலசமைத்தார்.

- பெ.பு. 4215
பாடல் கேளுங்கள்
 மந்திரிகள்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க